2025 ஜூலை 02, புதன்கிழமை

பெல்ஜியத்தை வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், இங்கிலாந்தில் நேற்றிரவு நடைபெற்ற பெல்ஜியத்துடனான குழு பி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.

இங்கிலாந்து சார்பாக, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், மேஸன் மெளன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமெலு லுக்காக்கு பெற்றிருந்தார்.

இதேவேளை, பிரான்ஸில் இன்று அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் போர்த்துக்கல், பிரான்ஸுக்கிடையேயான குழு சி போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், போலந்தில் நடைபெற்ற போலந்து, இத்தாலிக்கிடையேயான குழு ஏ போட்டியொன்றானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இதேவேளை, பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியாவில் நேற்றிரவு நடைபெற்ற நெதர்லாந்து, பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியாவுக்கிடையிலான குழு ஏ போட்டியொன்றானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், குரோஷியாவில் நடைபெற்ற குரோஷியா, சுவீடனுக்கிடையிலான குழு சி போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வென்றது. குரோஷியா சார்பாக, நிகொலா விளாசிச், அன்ட்ரேஜ் கிரமரிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சுவீடன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் பேர்க் பெற்றிருந்தார்.

இதேவேளை, அயர்லாந்தில் நடைபெற்ற வேல்ஸ், அயர்லாந்துக்கிடையேயான குழு எச் போட்டியொன்றானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவில் இன்று அதிகாலை நடைபெற்ற ரஷ்யா, துருக்கிக்கிடையேயான குழு ஜி போட்டியொன்றானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. ரஷ்யா சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டன் மிரான்சுக் பெற்றதோடு, துருக்கி சார்பாகப் பெறப்பட்ட கோலை கெனன் கரமன் பெற்றிருந்தார்.

இதேவேளை, சேர்பியாவில் நடைபெற்ற சேர்பியா, ஹங்கேரிக்கிடையேயான குழு ஜி போட்டியொன்றில் 0-1 என்ற கோல் கணக்கில் சேர்பியா தோல்வியடைந்தது. ஹங்கேரி சார்பாகப் பெறப்பட்ட கோலை நோர்பேர்ட் கொன்யெவெஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இஸ்ரேலில் நடைபெற்ற செக் குடியரசு, இஸ்ரேலுக்கிடையேயான குழு எஃப் போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு வென்றிருந்தது. செக் குடியரசு சார்பாகப் பெறப்பட்ட கோலை மடேஜ் வைட்ரா ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. இஸ்ரேல் சார்பாகப் பெறப்பட்ட கோலை எரான் ஸகாவி பெற்றிருந்தார்.

இதேவேளை, ஐஸ்லாந்தில் நடைபெற்ற டென்மார்க், ஐஸ்லாந்துக்கிடையேயான குழு பி போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் வென்றது. டென்மார்க் சார்பாக, கிறிஸ்டியன் எரிக்சன், றொபேர்ட் ஸ்கொவ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதுடன், மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.

இந்நிலையில், நோர்வேயில் நேற்றிரவு நடைபெற்ற றோமானியாவுக்கெதிரான குழு ஈ போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் நோர்வே வென்றது. நோர்வே சார்பாக, எர்லிங் பிராட் ஹலான்ட் மூன்று கோல்களையும், அலெக்ஸான்டர் சொர்லொத் ஒரு கோலையும் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .