Editorial / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்சனல் அணியின் மத்திய வீரர் மெசூட் ஏஸில், கழகத்துக்காக தனது பெறுபேறுகளை நியாயப்படுத்தியுள்ளதோடு, விமர்சனங்களை முன்வைத்துவரும் முன்னாள் வீரர்கள், "பேசுவதை நிறுத்தி, ஆதரவளிக்க ஆரம்பிக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏஸிலும் அவரது சக வீரர்களும், இந்தப் பருவகாலத்தில் போதியளவு சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தாதன் காரணமாக, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, லிவர்பூல் அணிக்கெதிரான போட்டியில், 0-4 என்ற கோல் கணக்கில் தோற்றமை, அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியது.
"இலண்டனில் எனது நேரத்தின்போது முன்வைக்கப்பட்ட ஏராளமான விமர்சனங்களை, தனிப்பட்ட ரீதியில் நான் ஏற்க வேண்டியிருந்தது.
"அதிக விலை, அதிக பேராசை, சிறப்பான உடல்மொழியின்மை, போராட்ட குணம் இன்மை - இவை தான், என்னைப் பற்றி, மக்கள் தெரிவித்த விமர்சனங்களாகும்.
"இந்தக் கருத்துகளில் சில, என்னைப் பற்றித் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்டன. சில, முன்னாள் வீரர்களால் - கழகத்தில் வெற்றிகரமானதாகவும் வெற்றிகரமாக இல்லாதவர்களாலும் - முன்வைக்கப்பட்டன.
"விமர்சனம் என்பது, எல்லா கால்பந்தாட்ட வீரர்களும் சந்திக்கும் ஒன்று என்ற போதிலும், ஜாம்பவான்கள், ஜாம்பவான்கள் போன்று செயற்படுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆர்சனலின் முன்னாள் வீரர்களுக்கான எனது ஆலோசனை, பேசுவதை நிறுத்தி, ஆதரவளிப்பதை ஆரம்பியுங்கள் என்பதாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .