Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது நாளான இன்று, உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் போராடி, தனது மூன்றாவது சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.
தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் சோபியா கெனினை எதிர்கொண்ட றோமானியாவின் சிமோனா ஹலெப், முதலாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி இரண்டாவது செட்டின் நடுப்பகுதியிலும் முன்னிலையிலிருந்தார்.
எனினும் டை பிரேக்கர் வரை இரண்டாவது செட்டை சோபியா கெனின் 7-6 (7-5) என்ற கணக்கில் வென்றதோடு மூன்றாவது செட்டிலும் முன்னிலை வகித்தார். ஆயினும் சுதாகரித்துக் கொண்ட சிமோனா ஹலெப், 6-4 என்ற செட் கணக்கில் மூன்றாவது செட்டைக் கைப்பற்றி போட்டியை வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேவேளை, 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கனடாவின் இக்னியே போச்சார்ட்டை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவேனியாவின் தமரா ஸிடன்செக்கை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இதேவேளை, உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவாக்கியாவின் விக்டோரியா குஸ்மோவாவை வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago