2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

முதலிடத்தில் மன்செஸ்டர் சிற்றி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் புள்ளிகளின் பட்டியலில், மன்செஸ்டர் சிற்றி அணி முதலாமிடத்தைப் பிடித்துள்ளது.

மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் மன்செஸ்டர் சிற்றி அணிக்குமிடையிலான போட்டி, 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததையடுத்தே, சிற்றி அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் காணப்பட்ட ஆர்சனல் அணி, இரண்டாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

ஏனைய போட்டிகளின் முடிவின் காரணமாக, ஏனைய சில இடங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மூன்றாம், நான்காம், ஐந்தாமிடங்களில் மாற்றங்களெவையுமின்றி, வெஸ்ட் ஹாம் யுனைட்டட், மன்செஸ்டர் யுனைட்டட், லெய்செஸ்டர் சிற்றி ஆகியன காணப்படுகின்றன.

ஏழாமிடத்தில் காணப்பட்ட டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் ஆறாமிடத்திலும், ஆறாமிடத்தில் காணப்பட்ட கிறிஸ்டல் பலஸ் அணி ஏழாமிடத்திலும் காணப்படுகின்றன.

ஒன்பதாமிடத்தில் காணப்பட்ட சௌதம்டன் 8ஆம் இடத்திலும் 12ஆம் இடத்தில் காணப்பட்ட லிவர்பூல் அணி 9ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், எவேர்ட்டன், ஸ்வான்சீ சிற்றி, வட்போர்ட், ஸ்டோக் சிற்றி, செல்சி, நோர்விச் சிற்றி, போர்ன்மொத், சண்டர்லான்ட், நியூகாசில் யுனைட்டட், அஸ்டன் வில்லா ஆகியன, தொடர்ந்துவரும் இடங்களில் காணப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .