Shanmugan Murugavel / 2016 ஜூலை 18 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்படும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை, பாகிஸ்தான் அணியின் யாசீர் ஷா பிடித்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியைத் தொடர்ந்து, புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதிலேயே, முதலாவது போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷா, நான்காவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இப்போட்டியில் விளையாடியிருக்காத இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். ஸ்டுவேர்ட் ப்ரோட், 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
துடுப்பாட்ட வீரர்களில் 5ஆவது இடத்தில் காணப்பட்ட யுனிஸ் கான், 6ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட, 10ஆவது இடத்தில் காணப்பட்ட மிஸ்பா உல் ஹக், 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
துடுப்பாட்டத் தரவரிசை (முதல் 10 இடங்கள்):
1. ஸ்டீவன் ஸ்மித்
2. கேன் வில்லியம்ஸன்
3. ஹஷிம் அம்லா
4. ஜோ றூட்
5. ஏபி டி வில்லியர்ஸ்
6. அடம் வோஜஸ், யுனிஸ் கான்
8. டேவிட் வோணர்
9. மிஸ்பா உல் ஹக்
10. அஞ்சலோ மத்தியூஸ்.
பந்துவீச்சுத் தரவரிசை (முதல் 10 இடங்கள்):
1. யாசீர் ஷா
2. இரவிச்சந்திரன் அஷ்வின்
3. ஜேம்ஸ் அன்டர்சன்
4. ஸ்டுவேர்ட் ப்ரோட்
5. டேல் ஸ்டெய்ன்
6. ரவீந்திர ஜடேஜா
7. ட்ரென்ட் போல்ட்
8. ஜொஷ் ஹேஸல்வூட்
9. மோர்னி மோர்க்கல்
10. வேர்ணன் பிலாந்தர்.
10 minute ago
17 minute ago
18 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
18 minute ago
34 minute ago