Shanmugan Murugavel / 2026 ஜனவரி 13 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் அணித்தலைவர் ஷாய் ஹோப், றொஸ்டன் சேஸ், அகீல் ஹொஸைன், ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் எஸ்.ஏ20 லீக்கில் பங்குபற்றுவதன் காரணமாக குழாமில் இடம்பெறவில்லை.
அந்தவகையில் பிரண்டன் கிங் அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார்.
இதேவேளை றொவ்மன் பவல், ஜேஸன் ஹோல்டர், றொமாரியோ ஷெஃப்பர்ட் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
குழாம்: பிரெண்டன் கிங் (அணித்தலைவர்), அலிக் அதனஸே, கேசி கார்ட்டி, ஜோன்சன் சார்ள்ஸ், மத்தியூ போர்டே, ஜஸ்டின் கிறேவ்ஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், அமிர் ஜாங்கூ, ஷாமர் ஜோசப், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, காரி பியர், குயென்டின் சாம்சன், ஜேடன் சியல்ஸ், றமொன் சிமொன்ட்ஸ், ஷாமர் ஸ்பிறிங்கர்.
16 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
3 hours ago