Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறுவதற்கு 419 ஓட்டங்களை மேற்கிந்தியத் தீவுகள் பெற வேண்டியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுடன், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வென்ற நிலையில், மெளன்ட் மகட்டரேயில் வியாழக்கிழமை (18) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டெவொன் கொன்வேயின் 227, அணித்தலைவர் டொம் லேதமின் 137, றஷின் றவீந்திரவின் ஆட்டமிழக்காத 72 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 575 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் கவெம் ஹொட்ஜின் ஆட்டமிழக்காத 123, பிரெண்டன் கிங்கின் 63, ஜோன் கம்பெல்லின் 45, அலிக் அதனஸேயின் 45, ஜஸ்டின் கிறேவ்ஸின் 43 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 420 ஓட்டங்களைப் பெற்றது. ஜேக்கப் டஃபி 4, அஜாஸ் பட்டேல் 3, மைக்கல் றே 2, டரைல் மிற்செல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, லேதமின் 101, கொன்வேயின் 100, கேன் வில்லியம்சனின் ஆட்டமிழக்காத 40, றவீந்திரவின் ஆட்டமிழக்காத 46 ஓட்டங்களோடு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 306 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளை ஹொட்ஜ் வீழ்த்தினார்.
அந்தவகையில் 462 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடும் மே. தீவுகள், நான்காம் நாள் முடிவில் தமது இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் கிங் 37, கம்பெல் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago