Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருடன் முன்னர் திட்டமிட்டபடி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஆப்கானிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் மொஹமட் நபி ஓய்வு பெறமாட்டார் எனத் தெரிவதோடு, தனது மகன் ஹஸன் ஐஸகில்லுடன் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடும் நம்பிக்கையைக் கொண்டுள்ளார்.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் முடிவில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு நொவெம்பரில் 40 வயதான நபி தெரிவித்திருந்தபோதும் தற்போது எதிர்காலம் குறித்து இன்னும் யோசிப்பதாகக் கூறியுள்ளார்.
இப்போட்டிகள் தனது கடைசி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாக இருக்காதெனத் தெரிவித்த நபி, தான் குறைவாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, இளைஞர்களுக்கு அனுபவத்தை கட்டமைக்க வாய்ப்புகளை வழங்கப் போவதாகவும், சிரேஷ்ட வீரர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் உயர் மட்டப் போட்டிகளில் தனது உடற்றகுதியைப் பொறுத்து விளையாடலாம் அல்லது விளையாடாமல் விடலாம் பார்ப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நபியின் 18 வயதான மகனான துடுப்பாட்டவீரரான ஐஸகில் 2024ஆம் ஆண்டு 19 வயதுக்குட்ப்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago