2026 மே 21, வியாழக்கிழமை

முதல் வாய்ப்பிலேயே முத்திரை (வீடியோ)

Mayu   / 2026 மே 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் 2026 தொடரின் 65ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தங்களின் பிளே-ஆஃப் (Playoff) சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் கடினமான ஆடுகளத்தில் கேகேஆர் அணியின் மூத்த வீரர் மனிஷ் பாண்டேவின் நிதானமான ஆட்டம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து 148 ரன்கள் என்ற இலக்குடன் களம் புகுந்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, இந்த சீசனில் முதன்முறையாக பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்ற மனிஷ் பாண்டே 3ஆவது வீரராக களம் இறங்கினார்.

ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர், பவுண்டரிகளைப் பறக்கவிட்டு ரன் ரேட்டை சீராக உயர்த்தினார். ரோவ்மன் பவலுடன் (40 ரன்கள்) இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த மனிஷ் பாண்டே, 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

ஆபத்பாந்தவனாகச் செயல்பட்டு அணியை மீட்டெடுத்த மனிஷ் பாண்டேவிற்கு ஆட்டநாயகன் (Player of the Match) விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 13 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றை நோக்கிய பந்தயத்தில் தீவிரமாக முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X