Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவரான அஞ்சலோ மத்தியூஸின் உடற்றகுதிக்காக காத்த வண்ணம் இலங்கை காணப்படுகிறது.
இலங்கையின் உள்ளூர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 போட்டித் தொடர் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த நிலையில், வலது பின்தொடை தசைநார் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ள அஞ்சலோ மத்தியூஸ், தனது கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கவில்லை.
பங்களாதேஷில் இடம்பெற்ற பங்களாதேஷ், இலங்கை, சிம்பாப்வே அணிகள் பங்கேற் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியிருந்தன் பின்னர் அஞ்சலோ மத்தியூஸ் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காயமடைந்திருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப் மற்றும் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா ஆகியோர் கடந்த வாரயிறுதியில் தத்தமது கழகங்களுக்காக போட்டிகளில் பங்கேற்ற நிலையில், இவர்களதும் அஞ்சலோ மத்தியூஸுனதும் உடற்றகுதி நாளை ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரின்போது பின்தொடை தசைநார் காயத்துக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் ஷெஹான் மதுஷங்க, இத்தொடருக்கு முன்னதான பயிற்சியில் வலது தோட்படையைத் தாக்கிக் கொண்ட சகலதுறை வீரர் அசேல குணரட்ன ஆகியோர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் பங்கேற்கும் இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்கமாட்டார்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது மீள்வருகையை நிகழ்த்த ஆவலாகவுள்ள சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க, கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற தனது கழகத்துக்காக போட்டிகளில், 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago