Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் ஜுவென்டஸ் கால்பந்தாட்டக் கழகத்திலிருந்து, பிரெஞ் தேசிய கால்பந்தாட்ட அணியின் வீரரான போல் பொக்பா 116 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டால் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (09) ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, கால்பந்தாட்ட வீரர்களை ஒப்பந்தம் செய்யப்படுவதற்கான உலக சாதனைத் தொகையானது தகர்க்கப்பட்டிருந்தது.

இன்னொரு பிறீமியர் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணியிலிருந்துய், வேல்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியின் வீரரான கரித் பேல் 110 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு ஸ்பெயினின் லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டால் 2013ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டபோதே இதுவரையில் சாதனையாக இதுவரையில் இருந்திருந்தது.

வெறும் இரண்டு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு 2012ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைட்டெட்டை விட்டுச் சென்ற 23 வயதான பொக்பா, தற்போது ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பொக்பா ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையானது, ஜூவென்டஸ் அணிக்கு இரண்டு வருடங்களில் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, குறிப்பிட்ட சில மட்டங்களை அடையும் பட்சத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகைக்கு மேலதிகமாக ஐந்து மில்லியன் யூரோக்கள் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள பொக்பா, தான் கால்பந்தாட்டத்தில் அடைய வேண்டுமென்று நினைக்கின்ற அனைத்தையும் அடைவதற்கான சரியான கழகம் மன்செஸ்டர் யுனைட்டெட் எனக் கூறியுள்ளார். தவிர, மன்செஸ்டர் யுனைட்டெட்டில் மீள இணைவதில் மகிழ்ச்சியடைவதாகவும், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு தனது இடத்தில் எப்போதும் சிறப்பான இடம் உள்ளது என மேலும் தெரிவித்த அவர், ஜொஸ் மொரின்ஹோவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை, கருத்துத் தெரிவித்த மொரின்ஹோ, அடுத்த பத்தாண்டுகள் மற்றும் அதற்கு அப்பால், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் இதயமாக இருப்பதற்கான வாய்ப்பு பொக்பாவுக்கு உண்டு எனக் கூறியுள்ளார். உலகத்தின் சிறந்த வீரர்களில் பொக்பாவும் ஒருவர் என மேலும் தெரிவித்த அவர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியில் முக்கிய பங்கை வகிப்பார் என்றும், தான் இங்கு எதிர்காலத்தை கட்டியெழுப்பவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

மன்செஸ்டர் யுனைட்டெட்டில் முதலிருந்தபோது ஏழு போட்டிகளில் மட்டுமே விளையாடிய பொக்பா, அப்போதைய முகாமையாளர் சேர் அலெக்ஸ் ஃபெகியூஸன் தன்னை விளையாடும் பதினொருவரில் உள்ளடக்காதபோது ஏமாற்றமடைந்ததாகவும் விரக்தி அடைந்ததாகவும் கூறி அணியிலிருந்து வெளியேறியிருந்தார்.


18 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago