Freelancer / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கொமியுனிட்டி ஷீல்ட் போட்டியில் மன்செஸ்டர் சிற்றியை ஆர்சனல் வென்றது.
கடந்த பிறீமியர் லீக் பருவகால முதலாம், இரண்டாம் அணிகளுக்கிடையிலான இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை கோல் பல்மரும், ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை லியன்ட்ரோ ட்ரோஸார்ட்டும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் பெனால்டியில் 4-1 என்ற ரீதியிலேயே போட்டியில் ஆர்சனல் வென்றிருந்தது. இதில் சிற்றியின் அணித்தலைவர் கெவின் டி ப்ரூனே தனதுதையை கோல் கம்பத்தில் செலுத்தியதோடு, றொட்றியின் உதையை ஆர்சனலின் கோல் காப்பாளர் ஆரோன் ரம்ஸ்டேல் தடுத்திருந்தார். பெர்னார்டோ சில்வா மாத்திரமே சிற்றி சார்பாக தனதுதையை கோல் கம்பத்துக்குள்ளே செலுத்தியிருந்தார். ஆர்சனல் சார்பாக அணித்தலைவர் மார்டின் ஒடெகார்ட், ட்ரோஸார்ட், புகாயோ ஸாகா, பேபியோ வியர்ரா ஆகியோர் தமதுதைகளை உள்ளே செலுத்தியிருந்தனர்.
8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026