2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’மப்பேயில் மட்டும் பரிஸ் ஸா ஜெர்மைன் தங்கியிருக்கவில்லை’

Mithuna   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பேயில் மட்டும் கோல்களுக்காகத் தங்கியிருக்கவில்லை என அக்கழகத்தின் முகாமையாளர் லூயிஸ் என்றிக்கே நேற்று முன்தினம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

லீக் 1 தொடரில் இப்பருவகாலத்தில் 12 போட்டிகளில் 14 கோல்களைப் பெற்றதோடு, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் மூன்று கோல்களைப் பெற்றுள்ளார். மப்பேக்கு அடுத்ததாக அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து பரிஸ் ஸா ஜெர்மைனில் பின்களவீரரான அஷ்ரஃப் ஹக்கிமி, முன்களவீரரான ரன்டல் கோலோ முலானி ஆகியோர் தலா நான்கு கோல்களைப் பெற்றுள்ளனர்.

கடந்த பருவகாலத்தில் லியனல் மெஸ்ஸி 21 கோல்களைப் பெற்றதோடு, நெய்மர் 18 கோல்களைப் பெற்றிருந்த நிலையில் கழகத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .