2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மீண்டும் மே. தீவுகளை வென்ற அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 28 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுடனான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியிலும் அவுஸ்திரேலியா வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் ஏற்கெனவே வென்ற அவுஸ்திரேலியா, சென். கிட்ஸில் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் 31 (15), றொமாரியோ ஷெப்பர்ட்டின் 28 (18), றொவ்மன் பவலின் 28 (22), ஜேஸன் ஹோல்டரின் 26 (16), பிரெண்டன் கிங்கின் 18 (10), அகீல் ஹொஸைனின் ஆ.இ 16 (10), மத்தியூ போர்டேயின் 15 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் ஆரோன் ஹார்டி 4-0-24-2, நாதன் எலிஸ் 4-0-21-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 206 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, கமரன் கிறீனின் ஆட்டமிழக்காத 55 (35), ஜொஷ் இங்லிஸின் 51 (30), கிளென் மக்ஸ்வெல்லின் 47 (18), ஹார்டியின் 23 (16) ஓட்டங்களோடு 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் ஜெடியாஹ் பிளேட்ஸ் 4-0-29-3 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக மக்ஸ்வெல் தெரிவானார்.

இரண்டு அணிகளுக்கிடையிலான ஐந்தாவது போட்டியானது செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .