2025 மே 21, புதன்கிழமை

முடிவுக்கு வந்த டோக்கியோ 2020

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளானவை இன்று முடிவுக்கு வந்திருந்தன.

அந்தவகையில், பதக்கப் பட்டியலில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களுடன் ஐக்கிய அமெரிக்கா முதலிடம் பிடித்திருந்தது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தை ஜப்பான் பிடித்திருந்தது.

22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலப் பதக்கங்களுடன் பிரித்தானியா நான்காமிடத்தைப் பெற்றதோடு, 20 தங்கம், 28 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தை ரஷ்ய ஒலிம்பிக் செயற்குழு பிடித்திருந்தது.

ஆண்களுக்கான மரதனோட்டத்தில், கென்யாவின் எலியுட் கிப்சோஞ்சே தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் மேலதிக நேரம் வரை சென்ற இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்னை வென்று பிரேஸில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது. தவிர, பெண்களுக்கான கால்பந்தாட்டத்தில் மேலதிக நேரத்திலும் 1-1 என்ற கோல் கணக்கிலும், ஐந்தாவது பெனால்டியிலும் 2-2 என சமநிலையில் காணப்பட்டு, ஆறாவது பெனால்டியில் 3-2 என்ற ரீதியில் சுவீடனை வென்று கனடா தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது.

இந்நிலையில், கராத்தே இறுதிப் போட்டியில் சவுதி அரேபியாவின்  தரெக் ஹமெடி, ஈரானின் சஜாட் கஞ்ஸடேஹ்யின் கழுத்தை நோக்கி உதைய அவர் மூர்ச்சையற்று இருந்த நிலையில், ஹமெடி தகுதிநீக்கம் செய்யப்பட்டு கஞ்ஸடேஹ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை, பெண்களுக்கான, ஆண்களுக்கான 4 * 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் ஐ. அமெரிக்கா தங்கம் வென்றிருந்தது.

தவிர, பெண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் நெதர்லாந்தின் சிஃபான் ஹஸன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இந்நிலையில், அடுத்த 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கானது பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .