Shanmugan Murugavel / 2021 ஜனவரி 04 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு அத்லெட்டிகோ மட்ரிட் முன்னேறியது.
அலாவேஸின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே லா லிகா புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலாமிடத்துக்கு அத்லெட்டிகோ முன்னேறியுள்ளது.
அத்லெட்டிகோ சார்பாக, மார்கோஸ் லொரன்டே, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, அலாவேஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
38 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ காணப்படுகின்றது. 36 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் காணப்படுகின்றது. எனினும், அத்லெட்டிகோவை விட றியல் இரண்டு போட்டிகள் அதிகமாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
20 minute ago
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
21 minute ago
37 minute ago