2025 ஜூலை 03, வியாழக்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறினார் ஜோக்கோவிச்

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நடப்புச் சம்பியனான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், இன்று வெளியிடப்பட்ட தரப்படுத்தலில் முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தற்போதைய உலகின் நான்காம்நிலை வீரரான டொமினிக் தியெமை எதிர்கொண்டிருந்த நொவக் ஜோக்கோவிச், 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்று சம்பியனாகியிருந்த நிலையிலேயே, இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.

தனது அரையிறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரரை 7-6 (7-1), 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்றே இறுதிப் போட்டிக்கு நொவக் ஜோக்கோவிச் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், தனது காலிறுதிப் போட்டியில் தற்போதைய உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடாலை 7-6 (7-3), 7-6 (7-4), 4-6, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்றதுடன், அரையிறுதிப் போட்டியில் உலகின் ஏழாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை 3-6, 6-4, 7-6 (7-3), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் தோற்கடித்தே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை அடைந்திருந்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸாவை 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனாகியிருந்த ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனின், 15ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தை அடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .