Shanmugan Murugavel / 2025 நவம்பர் 20 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு நியூசிலாந்தின் டரைல் மிற்செல் முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது போட்டியில் 119 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கெதிரான இரண்டாவது போட்டியில் 102 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் பாபர் அஸாம், ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இலங்கைக்கெதிரான மேற்கூறப்பட்ட 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மட், 20ஆம் இடத்திலிருந்து 11 இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஐந்தாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமித்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான ஐந்தாவது போட்டியில் 36 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் றொமாரியோ ஷெப்பர்ட், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 58 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் தெம்பா பவுமா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை மேற்படி டெஸ்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் மார்கோ ஜன்சன், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
48 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026