Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 26 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கெதிரான உலகக் கிண்ண குழுநிலைப் போட்டியில் 45 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை ஐக்கிய் அரபு அமீரகத்துக்கெதிரான குழுநிலைப் போட்டியில் 3, இந்தியாவுக்கெதிரான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் கொர்பின் பொஷ், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 24ஆம் இடத்திலிருந்து 21 இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் ஓமானுக்கெதிரான குழுநிலைப் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் அடம் ஸாம்பா, எட்டாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
இது தவிர இத்தாலிக்கெதிரான குழுநிலைப் போட்டியில் 3, சிம்பாப்வேக்கெதிரான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் மத்தியூ போர்ட், 30ஆம் இடத்திலிருந்து 23 இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் நெதர்லாந்துக்கெதிரான குழுநிலைப் போட்டியில் 1, தென்னாபிரிக்காவுக்கெதிரான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா, 15ஆம் இடத்திலிருந்து 7 இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை நமீபியாவுக்கெதிரான குழுநிலைப் போட்டியில் 100, இங்கிலாந்துக்கெதிரான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் சஹிப்ஸடா பர்ஹான், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர, ஐ.அ. அமீரகத்துக்கெதிரான குழுநிலைப் போட்டியில் 36, இந்தியாவுக்கெதிரான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் 45 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் டெவால்ட் பிறெவிஸ் 19ஆம் இடத்திலிருந்து 10 இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
23 minute ago
36 minute ago
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago
51 minute ago
3 hours ago