Editorial / 2019 செப்டெம்பர் 01 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி, கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று (01) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்படவுள்ளார்.
இலங்கை அணியானது இதற்கு முன்னதாக பல்லேகல மைதானத்தில் 11 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில், இலங்கை அணி 07 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளதுடன், இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதேவேளை, பல்லேகல மைதானத்தில் 07 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிப்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பல்லேகல மைதானத்தில் 03 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் மோதியுள்ளதுடன், அதில் ஒரு போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஒரு போட்டிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு நிறைவு பெற்றதுடன், மற்றைய போட்டி முடிவு இன்றி நிறைவடைந்துள்ளது.
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசையில் இலங்கை அணி 08ஆவது இடத்தில் உள்ளதுடன், நியூசிலாந்து 06ஆவது இடத்தில் உள்ளது.
தரவரிசையை விட வீர்களின் திறமையே இன்றை போட்டிக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக அமையும் என, இருபதுக்கு 20 இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
32 minute ago
39 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
43 minute ago
1 hours ago