2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சிட்னியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் நோக்கும்போது நியூசிலாந்தே அதிகம் வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறது. எனினும் பாகிஸ்தானும் பெரிய போட்டிகளில் சாதிக்கக் கூடியதாகக் காணப்படுகின்றது. இரண்டு அணிகளுக்குமிடையிலான 28 போட்டிகளில் 17 போட்டிகளில் பாகிஸ்தானே வென்றதுடன், இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஆறிலும் நான்கிலும் பாகிஸ்தானே வென்றுள்ளன.

இரண்டு அணிகளுக்குமிடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆறு அரையிறுதிப் போட்டிகளில் மூன்றில் பாகிஸ்தானும், நியூசிலாந்தில் இரண்டும் வென்றுள்ளன.

நியூசிலாந்தைப் பொறுத்த வரையில் பின் அலென், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்ற நிலையில், பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் ஷகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் றாஃப், ஷடாப் கான், மொஹமட் ஹரிஸ், மொஹமட் றிஸ்வான் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.

சிட்னியில் இதுவரையில் இத்தொடரில் நடந்த போட்டிகளில் ஒரு போட்டியைத் தவிர ஏனைய போட்டிகள் அனைத்திலும் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியே வென்ற நிலையில் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணியே வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. இரண்டாவது அணி துடுப்பெடுத்தாடும்போது பந்து சுழல அதிக சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .