Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2023 ஜூன் 21 , மு.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பேர்மிங்ஹாமில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நேற்றிரவு முடிவுக்கு வந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜோ றூட்டின் ஆட்டமிழக்காத 118, ஜொனி பெயார்ஸ்டோவின் 78, ஸக் குறொலியின் 61 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், நேதன் லையன் 4, ஜொஷ் ஹேசில்வூட் 2, கமரொன் கிறீன் மற்றும் ஸ்கொட் போலண்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, உஸ்மான் கவாஜாவின் 141, அலெக்ஸ் காரியின் 66, ட்ரெவிஸ் ஹெட்டின் 50, அணித்தலைவர் பற் கமின்ஸின் 38, கமரொன் கிறீனின் 38 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 386 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஒலி றொபின்ஸன், ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி 2 மற்றும் ஜேம்ஸ் அன்டர்சன், அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றூட் 46, ஹரி ப்ரூக் 46, ஸ்டோக்ஸ் 43, றொபின்ஸன் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லையன், கமின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஜொஷ் ஹேசில்வூட் மற்றும் ஸ்கொட் போலண்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அந்தவகையில் 281 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, கவாஜாவின் 65, கமின்ஸின் ஆட்டமிழக்காத 44, லையனின் ஆட்டமிழக்காத 16 ஓட்டங்களோடு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக கவாஜா தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Jul 2025