Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான முதலாவது போட்டியில் நியூசிலாந்து இன்று வென்றது.
தமது இரண்டாவது இனிங்ஸில் 132 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தவாறு இன்றைய ஐந்தாம் நாளை ஆரம்பித்த இங்கிலாந்து, 320 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து இனிங்ஸ் மற்றும் 49 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் 66, கிறிஸ் வோக்ஸ் 52, மார்க் ஸ்டோன்மன் 55, அணித்தலைவர் ஜோ றூட் 51 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நீல் வக்னர், டொட் அஸ்டின், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியில் தமது முதலாவது இனிங்ஸில் 58 ஓட்டங்களுக்கு ட்ரெண்ட் போல்ட், டிம் செளதியின் வேகத்தில் போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்து சுருண்டிருந்ததுடன், நியூசிலாந்து அணி தமது முதலாவது இனிங்ஸில், ஹென்றி நிக்கொல்ஸ், கேன் வில்லியம்சனின் சதங்களுடன் 8 விக்கெட் இழப்புக்கு 427 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக ட்ரெண்ட் போல்ட் தெரிவானார்.
20 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
06 Apr 2026