Editorial / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
35 வயதான ஜேம்ஸ் அன்டர்சன், 2009ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் முதலிடம் பெற்ற பின்னர் முதலிடத்தைப் பிடிக்கும் வயதான பந்துவீச்சாளர் என்பதுடன், 2006ஆம் ஆண்டு கிளென் மக்ராத் முதலிடம் பெற்ற பின்னர் முதலிடத்தைப் பிடிக்கும் வயதான வேகப்பந்துவீச்சாளராவர்.
இதேவேளை, டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தலில், மொயின் அலியை முந்தி, பென் ஸ்டோக்ஸ் நான்காமிடத்தைப் பிடித்துள்ளார். இதுதவிர, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் இரண்டு இடங்கள் முன்னேறி 21ஆவது இடத்தை பென் ஸ்டோக்ஸ் பிடித்துள்ளார்.
8 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago