Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று (07) நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இலங்கை அணி: தசுன் ஷனாகா (கேப்டன்), பதும் நிஷங்கா, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷனா, துஷான் ஹேமந்த, ட்ரவீன் மேத்திவ், துஷ்மந்த் சமீரா, மதீஷா பதிரானா, ஈஷான் மலிங்க.
பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்துல் சமாத், அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பஹர் சமான், கவாஜா நபே (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சஹிப்சதா பர்ஹான் (விக்கெட் கீப்பர்), சைம் ஆயுப், சதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் தரிக்.
முதல் டி20: ஜன.7(இன்று), தம்புள்ளை.இரண்டாவது டி20 : ஜன.9, தம்புள்ளை.மூன்றாவது டி20: ஜன.11, தம்புள்ளை.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago