2025 ஜூலை 16, புதன்கிழமை

முத்த சர்ச்சை: ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ராஜினாமா

Editorial   / 2023 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. பரிசளிப்பு விழாவின் போது ஸ்பெயின் வீராங்கனைகளின் கழுத்தில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது.

 பரிசளிப்பு விழா மேடையில் நின்ற ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ருபியாலெஸ் சில வீராங்கனைகளை கட்டிப்பிடித்து பாராட்டினார். அப்போது முன்கள வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசாவை இறுக்கி அணைத்ததுடன் உதட்டில் முத்தமிட்டார்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த வீராங்கனை சிறிது நேரத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில், 'ருபியாலெஸ் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை' என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் இது சர்ச்சையாக வெடித்தது. ருபியாலெசை கடுமையாக விமர்சித்த ஸ்பெயின் நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி மிக்யூல் இஸ்ட்டா, சமத்துவத்துறை மந்திரி ஐரினே மோன்டேரோ ஆகியோர், அவர் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கண்டித்தனர்.

முத்த விவகாரத்தால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ருபியாலெஸ் மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் கூறுகையில், 'நான் செய்தது முற்றிலும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். உற்சாகம், பரவசத்தின் வெளிப்பாடாக இவ்வாறு நடந்து கொண்டேனே தவிர இதில் உள்நோக்கம் இல்லை. என்றாலும் ஹெர்மோசாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கி உள்ளது. மேலும் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்யெின் நாட்டு மந்திரிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் லூயிஸ் ரூபியேல்ஸ் தனது ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 'பிபா' ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ளதால் அவர் பதவி விலகி உள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .