2025 மே 17, சனிக்கிழமை

முன்னிலையில் இலங்கை

Freelancer   / 2023 ஜூலை 17 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் காலியில் நேற்று முன்தினம் ஆரம்பித்த இப்போட்டியின் நேற்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை, அப்ரார் அஹ்மட், நசீம் ஷாவிட தலா 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், கசுன் ராஜித, பிரபாத் ஜெயசூரிய (3), ரமேஷ் மென்டிஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில் செளட் ஷகீல் 37 ஓட்டங்களுடனும், அக்ஹா சல்மான் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக ஷண் மசூட் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .