2025 மே 16, வெள்ளிக்கிழமை

முன்னிலையில் பாகிஸ்தான்

Mayu   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்
காணப்படுகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், மெல்பேணில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த
இப்போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை
இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பாகிஸ்தான், குறிபிட்ட நேரத்தின் பின்னர்
மொஹமட் றிஸ்வானை அணித்தலைவர் பற் கமின்ஸிடம் இழந்தது. தொடர்ந்து சிறிது நேரத்தில்
21 ஓட்டங்களுடன் ஷகீன் ஷா அஃப்ரிடியை நேதன் லையனிடம் இழந்தது.

இதையடுத்து ஹஸன் அலி கமின்ஸிடம் வீழ்ந்ததோடு, மிர் ஹம்ஸா லையனிடம் விழ சகல
விக்கெட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் பாகிஸ்தான்
பெற்றது. ஆமீர் ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ஷகீன் ஷா
அப்ரிடி (2), மிர் ஹம்ஸாவிடம் (2) உஸ்மான் கவாஜா, மர்னுஸ் லபுஷைன், டேவிட் வோர்னர்,
ட்ரெவிஸ் ஹெட்டை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் இதன் பின்னர் ஜோடி சேர்ந்த மிற்செல் மார்ஷும், ஸ்டீவம் ஸ்மித்தும் இனிங்ஸைக்
கட்டியெழுப்பிய நிலையில் 96 ஓட்டங்களுடன் ஹம்ஸாவிடம் மார்ஷ் வீழ்ந்தார்.

தொடர்ந்துஸ்மித்தும் 50 ஓட்டங்களுடன் அஃப்ரிடியிடம் விழ நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் தமதுஇரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுள்ள அவுஸ்திரேலியா 241 ஓட்டங்கள் முன்னிலையிலுள்ளது. களத்தில் அலெக்ஸ் காரி 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .