2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மும்பையின் தந்திரோபாய நகர்வு

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 11 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில் தமது வழமையான சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ்வை மும்பை இந்தியன்ஸ் களமிறக்கியிருந்தது.

இப்பருவகால தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை ராகுல் சஹர் கைப்பற்றியிருந்தபோதும் அவருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ்வை களமிறக்கியது சிறிது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், ஷீகர் தவான், றிஷப் பண்ட், ஷிம்ரோன் ஹெட்மயர், அக்ஸர் பட்டேல், ககிஸோ என ஐந்து இடதுகை துடுப்பாட்டவீரர்களைக் கொண்ட டெல்லிக்கெதிராக ஜெயந்த் யாதவ்வை களமிறக்கியது சரியென அவர் நிரூபித்திருந்தார்.

இத்தொடரில் 16 போட்டிகளில் 44.14 ஓட்டங்கள் என்ற சராசரியில், 100 பந்துகளுக்கு 144.73 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 618 ஓட்டங்களைப் பெற்ற தவானின் விக்கெட்டை ஜெயந்த் யாதவ் கைப்பற்றியதுடன், தனது நான்கு ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்திருந்தார்.

இதுதவிர, டெல்லிக்கெதிரான முதலாவது தகுதிகாண் போட்டியில் தனது இரண்டு ஓவர்களில் 35 ஓட்டங்களை ராகுல் சஹர் விட்டுக் கொடுத்திருந்தார்.

கடந்தாண்டு சென்னை சுப்பர் கிங்ஸுக்கெதிரான முதலாவது தகுதிகாண் போட்டியின்போதும் சுரேஷ் ரெய்னாவைக் கட்டுப்படுத்துவதற்கான அணிக்குள் கொண்டு வரப்பட்ட ஜெயந்த் யாதவ், அவரது விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X