2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மெக்ஸிக்க குரான் பிறீயை வென்றார் ஹமில்டன்

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெராரி அணியுடன் உத்தி மோதலொன்றில் சிறப்பான கட்டுப்படுத்தப்பட்ட செலுத்துகை மூலம் மெக்ஸிக்க குரான் பிறீயை வென்ற மெர்சிடீஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது ஆறாவது ஃபோர்மியுலா வண் பட்டத்தைக் கைப்பற்றுவதை நெருங்குகிறார்.

அந்தவகையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க குரான் பிறீயில் தனது சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸிடம் 22 புள்ளிகளுக்கு மேல் இழக்கா விட்டால் இவ்வாண்டு ஃபோர்மியுலா வண் சம்பியனாக முடிசூடிக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த பந்தயத்தில், ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், போத்தாஸ் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தார்.

இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஃபெராரி அணியின் மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க் ஆரம்பித்தபோதும் 15ஆவது சுற்றிலேயே டயர்களை மாற்றுவதற்காக நிறுத்தும்போது முன்னிலையை இழந்திருந்தார். இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த வெட்டல், ஹமில்டன் டயர்களை மாற்றுவதற்காக நிறுத்தியதைத் தொடர்ந்து தானும் டயர்களை மாற்றுவதற்காக நிறுத்தும்போது முன்னிலையை இழந்திருந்தார்.

றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனுடன் மோதுண்ட காருடன் பந்தயத்தை ஜெயித்திருந்த ஹமில்டன், இவ்வாண்டுக்கான ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 363 புள்ளிகளைப் பெற்று, இரண்டாமிடத்தில் 289 புள்ளிகளுடன் உள்ள போத்தாஸூக்கும் தனக்குமிடையிலான வித்தியாசத்தை 74 புள்ளிகளாக அதிகரித்துக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .