2025 மே 21, புதன்கிழமை

மெட்வதேவ், ஷபலென்கா அரையிறுதிக்கு தகுதி

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டெனிஸ் போட்டிகளின் அரையிறுதிக்கு ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் மற்றும் பெண்கள் ஒற்றையரில்  பெலாரஸின் அரைனா ஷபலென்கா ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ், கால் இறுதி போட்டியில் நெதர்லாந்தைச் சேர்ந்த பொடிக் வன் டி ஷாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.

இதில் மெட்வதேவ் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஓபனில் 2ஆவது இடத்தை பிடித்த அவர் தொடர்ந்து 3ஆவது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரை இறுதியில் கனடாவைச் சேர்ந்த அகுர் அலிஸ்மியை மெட்வதேவ் எதிர்கொள்ளவுள்ளார்.

இதேவேளை, பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான பெலாரஸை சேர்ந்த ‌அரைனா ஷபலென்கா, 8ஆவது நிலையில் உள்ள செக் குடியரசின் பார்பரா கிரஜ்கோவா ஆகியோர் மோதினர்.

இதில் ‌ஷபலென்கா 6-1 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று முதல் முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில், உக்ரைனின் 5ஆம் நிலை வீராங்கனையான எலினா சுவிட்டோலினா, கனடாவை சேர்ந்த 19 வயதேயான லேலா பெர்னாண்டஸிடம் 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அரையிறுதிப் போட்டியில் ‌ஷபலென்கா- லேலா பெர்னாண்டஸ் ஆகியோர் மோதவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X