2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான 3ஆவது டெஸ்டில் தடுமாறுகிறது இலங்கை

Editorial   / 2018 ஜூன் 25 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பார்படோஸில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலையில் ஆரம்பித்த மூன்றாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி தடுமாறி வருகிறது.

இன்றைய இரண்டாம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் 74, ஷேன் டெளரிச் 71 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லஹிரு குமார 4, கசுன் ராஜித 3, சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களைப் பெற்றவாறு தடுமாறி வருகிறது.

தற்போது களத்தில், நிரோஷன் டிக்வெல்ல 13, றொஷேன் சில்வா மூன்று ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக, தனுஷ்க குணதிலக 29, குசல் மென்டிஸ் 22 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், கேமார் றோச், ஷனொன் கப்ரியல் ஆகியோர் தலா 2, ஜேஸன் ஹோல்டர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

மழை காரணமாக முதல் நாளில் 107 நிமிட ஆட்டம் இடம்பெறாத நிலையில், இன்று மழை காரணமாக 59 ஓவர்களே வீசப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .