2025 மே 12, திங்கட்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் ஹோல்டர், சியல்ஸ்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 09 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகளின் குழாமில் ஜேஸன் ஹோல்டர், ஜேடன் சியல்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரான அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின்போது ஐக்கிய அரபு அமீரக இருபதுக்கு – 20 தொடரில் பங்கேற்றதன் காரணமாக ஹோல்டரும், காயம் காரணமாக சியல்ஸும் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில் இக்குழாமில் டிட்டின்னேரியன் சந்திரபோல் இடம்பெற்றிருக்கவில்லை.

குழாம்: கிறேய்க் பிறத்வெய்ட் (அணித்தலைவர்), அலிக் அதனஸே, ஜோஷுவா டா சில்வா (விக்கெட் காப்பாளர்), ஜேஸன் ஹோல்டர், கவெம் ஹொட்ஜ், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசப் (உப அணித்தலைவர்), ஷாமர் ஜோசப், மிகைல் லூயிஸ், ஸஷரி மக்கஸ்கி, கேர்க் மக்கென்ஸி, குடகேஷ் மோட்டி, கேமார் றோச், ஜேடன் சியல்ஸ், கெவின் சின்கிளேயர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X