Shanmugan Murugavel / 2026 மார்ச் 02 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிரெனடாவில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இலங்கை பெண்கள் அணி வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், அணித்தலைவர் சாமரி அத்தப்பத்து (2), மல்கி மதர (3), நிலக்ஷிகா டி சில்வா (3), கவிஷா டில்ஹாரியிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களையே பெற்றது. அணித்தலைவி ஹேலி மத்தியூஸ் 28 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 102 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, அத்தப்பத்துவின் 39 (26), டில்ஹாரியின் ஆட்டமிழக்காத 18 (13) ஓட்டங்களோடு 18.1 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகியாக அத்பத்து தெரிவானார்.
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026