Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் டரன் பிராவோ பெயரிடப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான மேற்கிந்தியத் தீவுகளின் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத சுற்றுப்பயணத்துக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்காத டரன் பிராவோ, கடந்தாண்டு இறுதியிலேயே மேற்கிந்தியத் தீவுகளின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் சிரேஷ்ட வீரர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே டரன் பிராவோ குழாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தமது இறுதி டெஸ்ட் தொடரான பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என தோல்வியுற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு, டரன் பிராவோவின் மீள்வருகை நிச்சயம் இனிப்பான செய்தியாக இருக்கும்.
இதேவேளை, குறித்த குழாமில் ஜோன் கம்பெல் என்ற ஆரம்பத் துடுப்பாட்டவீரரும் ஷமரா புரூக்ஸ் என்ற துடுப்பாட்டவீரரும் புதுமுகங்களாக இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பும் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ள நிலையில், இவர் முதுகு உபாதையிலிருந்து குணமடைந்து வருவதன் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஒஷேன் தோமஸும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), கிரேய்க் பிறத்வெய்ட், டரன் பிராவோ, ஷமரா ப்ரூக்ஸ், ஜோன் கம்பெல், றொஸ்டன் சேஸ், ஷேன் டெளரிச், ஷனொன் கப்ரியல், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷை ஹோப், அல்ஸாரி ஜோசப், கேமார் றோச், ஜோமெல் வொரிக்கான், ஒஷேன் தோமஸ்.
6 hours ago
6 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
03 Oct 2025