2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது

Mithuna   / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை மே.  தீவுகளும், இரண்டாவது போட்டியை இங்கிலாந்தும் வென்ற நிலையில், பார்படோஸில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியை மே. தீவுகள் வென்றதைத் தொடர்ந்தே 2-1 என தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவுகளின் அணித்தலைவர் ஷே ஹோப், இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். மே. தீவுகள் சார்பாக சகலதுறைவீரர் மத்தியூ போர்டே இப்போட்டியில் அறிமுகத்தை மேற்கொண்டார்.

மழை காரணமாக 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆரம்பித்து பின்னர் மீண்டும் மழை பெய்தமை காரணமாக இங்கிலாந்தின் இனிங்ஸானது 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றதுடன் முடிவுக்கு வந்தது. துடுப்பாட்டத்தில் பென் டக்கெட் 71 (73), லியம் லிவிங்ஸ்டோன் 45 (56) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சு போர்டே 3, றொமாறியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 34 ஓவர்களில் 188 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மே. தீவுகள், கேசி கார்ட்டியின் 50 (58), அலிக் அதனஸேயின் 45 (51), றொமாறியோ ஷெப்பர்ட்டின் ஆட்டமிழக்காத 41 (28) ஓட்டங்களோடு 31.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் வில் ஜக்ஸ் 3, றெஹான் அஹ்மட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக போர்டேயும், தொடரின் நாயகனாக ஷே ஹோப்பும் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .