Shanmugan Murugavel / 2026 ஜனவரி 20 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொரோக்கோவில் நடைபெற்று வந்த தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில் இரண்டாவது தடவையாக செனகல் சம்பியனானது.
திங்கட்கிழமை (19) நடைபெற்ற மொரோக்கோவுடனான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே செனகல் சம்பியனானது.
போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், மேலதிக நேரத்திலேயே செனகலின் பபா குயெ கோலைப் பெற்றிருந்தார்.
இப்போட்டியின் வழமையான நேரம் முடிவடைய ஐந்து நிமிடங்கள் இருக்கையில் மூலையுதையொன்றின்போது மொரோக்கோவின் முன்களவீரரான பிரஹிம் டியஸை செனகலின் பின்களவீரர் எல் ஹட்ஜி மலிக் டியோஃப்பால் வீழ்த்தப்பட்டபோது காணொளி உதவி மத்தியஸ்தஸ்த அமைப்பை பார்வையிட்ட மத்தியஸ்தர் ஜீன்-ஜக் நடலா பெனால்டியை வழங்கியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது வீரர்களை மைதானத்திலிருந்து வெளியேறுமாறு செனகலின் பயிற்சியாளர் பபே பெளனா தியா உத்தரவிட்ட நிலையில், அவர்களின் நட்சத்திர வீரர் சாடியோ மனேயின் கோரிக்கையில் 14 நிமிடங்களின் பின்னரே அவர்கள் களத்துக்குத் திரும்பியிருந்தனர்.
பின்னர் டியஸின் பனெகா பெனால்டி உதையை செனகல் கோல் காப்பாளர் எடுவார்ட் மென்டி இலகுவாகத் தடுத்திருந்தார்.
6 hours ago
7 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
20 Jan 2026