2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

யுனைட்டெட்டை வீழ்த்திய சிற்றி

Mayu   / 2024 மார்ச் 04 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட் உடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

சிற்றி சார்பாக பில் பொடென் இரண்டு கோல்களையும், எர்லிங்க் பிறோட் ஹலான்ட் ஒரு கோலையும் பெற்றதோடு, யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் பெற்றிருந்தார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 63 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகிறது. 62 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் சிற்றியும், 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஆர்சனலும், 55 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அஸ்தன் வில்லாவும் காணப்படுகின்றன. இதில் ஆர்சனல்
ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X