2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யூரோ: இறுதிப் போட்டியில் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

வெம்ப்ளியில் இன்று அதிகாலை நடைபெற்ற டென்மார்க்குடனான அரையியிறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியின் 30ஆவது நிமிடத்தில் டென்மார்க்கின் முன்களவீரர் மிக்கேல் டம்ஸ்கார்ட் பிறீ கிக் மூலம் பெற்ற கோலின் மூலம் டென்மார்க் முதலில் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் இங்கிலாந்தின் முன்களவீரர் ரஹீம் ஸ்டேர்லிங்கின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை டென்மார்க்கின் கோல் காப்பாளர் கஸ்பர் ஷுமைக்கல் தடுத்தபோதும், ஸ்டேர்லிங்கை நோக்கி இன்னொரு இங்கிலாந்து முன்களவீரரான புகாயோ ஸாகா செலுத்திய பந்தை தடுக்க முயன்ற டென்மார்க்கின் பின்களவீரர் சிமோன் கெயரின் காலில் பட்டு பந்து கோல் கம்பத்துக்குள் செல்ல கோலெண்ணிக்கையை இங்கிலாந்து சமப்படுத்தியது.

பின்னர் வழமைய நேர முடிவு வரை மேலதிக கோலெதுவும் பெறப்படாத நிலையில், இங்கிலாந்தின் பின்களவீரர் ஹரி மக்குவாயா கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய பந்து உள்ளடங்லகாக பல தடுப்புக்களை ஷுமைக்கல் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், மேலதிக நேரத்தில் ஸ்டேர்லிங் பெனால்டி பகுதிக்குள் மெதுவான தொடுகையுடன் வீழ்ந்த நிலையில், பெனால்டி வழங்கப்பட்டது. அந்தவகஇயில், இங்கிலாந்தின் முன்களவீரர் ஹரி கேன் செலுத்திய பெனால்டியை ஷுமைக்கல் தடுத்தபோதும், அது மீண்டும் கேனிடம் செல்ல அவர் அதைக் கோலாக்கியதோடு இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .