Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அணி உத்தரவுகளின் உதவியுடன் ரஷ்ய கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநர் லூயிஸ் ஹமில்டன், இவ்வாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தனக்கும் சம்பியன்ஷிப்புக்கான தனது போட்டியாளரான பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலுக்குமான முன்னிலையை 50 புள்ளிகளாக அதிகரித்துக் கொண்டார்.
நேற்று இடம்பெற்ற குறித்த பந்தயத்தில் ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸே முதல்நிலையில் ஆரம்பித்ததுடன், இரண்டாவது, மூன்றாவது இடங்களிலிருந்து போத்தாஸும் வெட்டலும் ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில், பந்தயத்தின் ஆரம்பத்தில் குறித்த வரிசையிலேயே மூவரும் பயணித்திருந்தனர். எனினும் டயர் மாற்றும் சந்தர்ப்பத்தில் வெட்டலுக்கு பின்னே ஹமில்டன் வரவேண்டிய நிலை ஏற்பட்டபோதும் அடுத்த இரண்டு சுற்றுக்களில் வெட்டலை ஹமில்டன் முந்தியிருந்தார்.
இதன்பின்னர் பந்தயத்தின் நடுப்பகுதியில், ஹமில்டனை முன்செல்ல அனுமதிக்குமாறு போத்தாஸுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி அவர் ஒழுக, முன்னணிக்கு வந்த ஹமில்டன் பந்தயத்தை வெல்ல, போத்தாஸ் இரண்டாமிடத்தையும் வெட்டல் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
நான்காமிடத்தை வெட்டலின் சக பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் பெற, பின்வரிசையிலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டன்ப்பன் ஐந்தாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
அந்தவகையில், இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் 306 புள்ளிகளுடன் ஹமில்டன் முதலிடத்தில் காணப்படுகின்ற நிலையில், வெட்டல் 256 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் போத்தாஸ் 189 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago