2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ராகுல், பாண்டியா வெளியே; கில், ஷங்கர் உள்ளே

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட குழாம்களுக்கு, ஷப்மன் கில், விஜய் ஷங்கர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். அக்குழாம்களில் இடம்பெற்றிருந்த லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்டியா ஆகியோருக்குப் பதிலாகவே, இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும், இந்தியாவுக்கெதிரான தொடரில், ஷங்கர் இணையவுள்ளார். நாளை (15) இடம்பெறவுள்ள இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன்னதாக அவர் இணைவாரென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்தது. மறுபக்கமாக கில், அவுஸ்திரேலியத் தொடரில் இணைய மாட்டார். அவர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றுக்கான குழாமில் இணைவார்.

இந்திய அணியின் முக்கியமான வீரர்களான பாண்டியா, ராகுல் ஆகியோர், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, விசாரணைகள் முடிவடையும் வரை, இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை, பாண்டியா தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு அவர் மன்னிப்புக் கோரியுள்ள போதிலும், பாண்டியாவுக்கும் அந்நிகழ்ச்சியில் அவரோடு கலந்துகொண்டிருந்த ராகுலுக்கும், குறைந்தபட்சம் ஒரு போட்டித் தடையாவது விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .