2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ரோஹித் சர்மாவுக்கு காயம்

Editorial   / 2019 நவம்பர் 02 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களதேஸுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பங்களாதேஸ் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் பயிற்சிக்காக இலங்கையை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் அழைக்கப்பட்டு இருந்தார். 

அவர் வலுவாக எறிந்த ஒரு பந்து ரோகித் சர்மாவின் இடது தொடையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியது. இதனால் ரோகித் சர்மா பயிற்சியை பாதியில் கைவிட்டு வெளியேறிச் சென்ற ரோஹித் அதன் பிறகு மீண்டும் பயிற்சிகளில் கலந்துகொள்ளவில்லை.

அவரது காயத்தன்மை குறித்து பரிசோதித்த இந்திய கிரிக்கெட் சபையின் வைத்தியக் குழு, அவர் உடல்தகுதியுடன் இருப்பதாகவும், முதலாவது போட்டியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .