Shanmugan Murugavel / 2015 நவம்பர் 04 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன்ஸ் லீக் தொடரின் போட்டியில் கோலொன்றைப் பெற்று, மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அவ்வணியின் தலைவர் வெய்ன் றூணி, அக்கழகம் சார்பாகப் பெறப்பட்ட அதிக கோல்கள் பட்டியலில், இரண்டாமிடத்துக்கு முன்னேறினார்.
79ஆவது நிமிடத்தில் அவர் பெற்ற கோல், யுனைட்டட் அணி சார்பாக அவர் பெற்ற 237ஆவது கோலாகும். இது, அவ்வணியின் ஜாம்பவானான டெனிஸ் லோ, அவ்வணிக்காகப் பெற்றுக் கொடுத்த கோல்களின் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.
'இக்கழகத்தில் டெனிஸ் லோ, ஒரு ஜாம்பவானாவார், அவரது கோல் சாதனையைச் சமப்படுத்துவதென்பது, எனக்கு மிகப்பெரும் கௌரவமாகும்" என அவர் தெரிவித்தார்.
யுனைட்டட் சார்பான சாதனையாக, சேர் பொபி சார்லட்டனின் 249 கோல்கள் சாதனையைச் சமப்படுத்த, இன்னமும் 12 கோல்கள் தேவைப்படுகின்றன.
ஏற்கெனவே, செப்டெம்பர் மாதத்தில், சேர் சால்ட்டனின், இங்கிலாந்துக்காக 49 கோல்கள் என்ற சாதனையை, வெய்ன் றூணி முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .