2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

றியோ ஒலிம்பிக்: ஆண்கள் கரப்பந்தாட்டத்தில் பிரேஸிலிக்குத் தங்கம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் இத்தாலியை எதிர்கொண்ட றியோ ஒலிம்பிக்கை நடாத்தும் நாடான பிரேஸில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து தங்கப் பதக்கங்களைத் தவற விட்ட பிரேஸில், இம்முறை சொந்த மண்ணில் ஆரவாரமான சூழ்நிலையில், 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தனது நாட்டுக்கு ஏழாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், கால்பந்தாட்டத்தில் பிரேஸிலிக்குத் தங்கம் வென்று கொடுத்த பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் தலைவர் நேமரும் குறித்த இறுதிப் போட்டியைப் பார்வையிட்டிருந்தார்.

இதேவேளை, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், ரஷ்யாவும் ஐக்கிய அமெரிக்காவும் மோதியிருந்த நிலையில், இரண்டு செட்கள் பின்தங்கியிருந்த அமெரிக்கா, மீண்டு வந்து, 3-2 என்ற ரீதியில் போட்டியை வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தது.

அரையிறுதிப் போட்டிகளில், ரஷ்யாவை வென்று பிரேஸில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்ததுடன், அமெரிக்காவை வென்று இத்தாலி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .