Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சாதனை முறியடிப்பாளரான ஐக்கிய அமேரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ், சக அமெரிக்க வீரரான றயன் லொட்டியை 200 மீற்றர் தனிநபர் மெட்லியில்தோற்கடித்து, ஒரு போட்டியொன்றில் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது நீச்சல் வீரராக மாறினார்.
மேற்கூறப்பட்ட போட்டியுடன் சேர்த்து, எந்தவொரு ஒலிம்பிக் வீரரும் இலகுவாக அடைந்துவிடாத 22ஆவது தங்கப்பதக்கத்தை 31 வயதான பெல்ப்ஸ் வென்ற நிலையில், 32 வயதான லொட்டி ஐந்தாவது இடத்தையே பெற்றார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற ஜப்பானின் கொசுகே ஹஜினோவை விட இரண்டு செக்கன்கள் முதலே பெல்ப்ஸ் போட்டித் தூரத்தை கடந்திருந்ததுடன், சீனாவின் ஷு வாங் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றிருந்தார்.
ஒரு நிமிடம் 54.66 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த பெல்ப்ஸ், அதிக தங்கப் பதக்கங்கள் பெற்ற இரண்டாவது ஒலிம்பிக்போட்டியாளரை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார். சோவியத் யூனியனைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனை லரிசா லடைனியா ஒன்பது தங்கப் பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.
2012 இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வு பெற்று 2014ஆம் ஆண்டு மீண்டும் திரும்பிய பெல்ப்ஸ், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த றியோ ஒலிம்பிக்கில், மேற்கூறப்பட்ட போட்டியுடன் சேர்த்து, 200 மீற்றர் பட்டர்பிளை, 4*100 மீற்றர் பிறீஸ்டைல் அஞ்சல், 4*200 மீற்றர் பிறீஸ்டைல் அஞ்சல் நான்கு தங்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ், நாளை காலை 6. 41க்கு தனது இறுதி நிகழ்வான 100மீற்றர் பட்டர்பிளை நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
13 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago