2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

றியோ ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிறைந்த ஆரம் நிகழ்வுகளைத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இதில், பதக்கங்களின் பட்டியலில், தற்போது வரை 2 தங்கங்களைப் பெற்றுள்ள அவுஸ்திரேலியா, முதலிடத்தில் காணப்பட்டது. இதில், பெண்களுக்கான 4*100 மீற்றர் ஃபிறீஸ்டைல் அஞ்சல் நீச்சலில், உலக சாதனையையும் ஒலிம்பிக் சாதனையையும் படைத்துத் தங்கம் வென்ற பெண்கள் அணியினர், அந்நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர்.

மற்றைய தங்கத்தை, ஆண்களின் 400 மீற்றர் ஃபிறீஸ்டைல் நீச்சலோட்டத்தில் ஹோர்ட்டன் மக் பெற்றுக் கொடுத்தார். அவ்வணிக்கு, வெண்கலப் பதக்கமொன்றும் கிடைத்தது.

ஹங்கேரி அணிக்கு 2 தங்கங்கள்: அமெரிக்க அணிக்கு ஒரு தங்கம், 4 வெள்ளிகள்: தென்கொரிய அணிககு ஒரு தங்கம், ஒரு வெள்ளி: ஜப்பான் அணிக்கு ஒரு தங்கம், 4 வெண்கலங்கள் ஆகியன கிடைத்தன. ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், ரஷ்யா, தாய்லாந்து, வியட்னாம் ஆகியன தலா ஒரு தங்கத்தை வென்றிருந்தன.

இலங்கைக்கோ அல்லது அயல் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கோ பதக்கங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .