Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில், இரண்டு தடவை ஒலிம்பிக் சம்பியனான ஜமைக்காவின் ஷெலி-ஆன் ஃபிறேஸர்-பிறைஸை, இடம்பெற்றுக் கொண்டிருக்கும் றியோ ஒலிம்பிக்கில் தோற்கடித்த சக ஜமைக்கா வீராங்கனை எலைனி தொம்ஸன் தங்கப் பதக்கம் வென்றார்.
24 வயதான தொம்ஸன், 10.71 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அவர், தான் எல்லைக் கோட்டை கடந்தபோது, தான் எல்லைக் கோட்டை கடந்து விட்டேனா என்று திரும்பிப் பார்த்ததாகவும் தனக்கு எவ்வாறு கொண்டாடுவது எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
பெண்களுக்கான ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கத்தை வெல்லும் முதலாவது வீராங்கனையாக மாறும் பொருட்டு களமிறங்கிய ஃபிறேஸர்-பிறைஸ், போட்டித் தூரத்தை 10.83 செக்கன்களில் கடந்து மூன்றமிடத்தையே பெற்றார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அவர், 100 மீற்றர் பட்டமானது ஐமைக்காவில் தங்குவது குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்ததுடன், தான் பயிற்சி பெறும் சக வீராங்கனையுடன் பதக்கம் பெற்றுள்ளதாகவும், தான் ஜமைக்கா வீராங்கனையாக பெருமையடைவதாக கூறியுள்ளார்.
மேற்படி போட்டியில், போட்டித் தூரத்தை 10.83 செக்கன்களில் கடந்த ஐக்கிய அமெரிக்க வீராங்கனை டோரி போயி இரண்டாமிடத்தைப் பெற்றார்.
20 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago