2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

றசலின் துடுப்புக்குத் தடை

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்றுவரும் பிக் பாஷ் லீக் இருபதுக்கு-20 தொடரில், சிட்னி தண்டர் அணிக்காக விளையாடிவரும் மேற்கிந்தியத் தீவுகளின் அன்ட்ரே றசல் பயன்படுத்திய துடுப்புக்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, தடை விதித்துள்ளது.

சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கெதிராக நேற்று  இடம்பெற்ற போட்டியில், கறுப்பு நிறத் துடுப்பொன்றை, றசல் பயன்படுத்தினார். எனினும், அந்தத் துடுப்பு, பந்தில் வர்ண மாற்றங்களை ஏற்படுத்துகிறது என போட்டி அதிகாரிகள் அறிவித்ததையடுத்து, குறித்த துடுப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஷ் லீக் விதிமுறைகளின்படி, அணியின் சீரூடை நிறத்தில் அல்லது கறுப்பு நிறத்தினாலான துடுப்புகளை, வீரர்கள் பயன்படுத்த முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .