2026 பெப்ரவரி 10, செவ்வாய்க்கிழமை

லிவர்பூலை வென்ற சிற்றி

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

சிற்றி சார்பாக பெர்ணார்டோ சில்வா, எர்லிங் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் ஸபொஸ்லாய் பெற்றார்.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 56 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் சிற்றியும், 47 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அஸ்தன் வில்லாவும், 44 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .