Editorial / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற லாஸ் பல்மாஸ் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாக கரித் பேல் இரண்டு கோல்களையும் கரீம் பென்ஸீமா ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை, பார்சிலோனா, செவில்லா அணிகளுக்கிடையே நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ், லியனல் மெஸ்ஸி ஆகியொர் தலா ஒவ்வோர் கோலையும் செவில்லா சார்பாக, பிராங்கோ வஸ்கூஸ், லூயிஸ் முறியல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
11 minute ago
22 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
52 minute ago